நெரிஞ்சிப்பேட்டை மின் நிலைய பராமரிப்பு பணியையொட்டி கதவணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்


நெரிஞ்சிப்பேட்டை மின் நிலைய பராமரிப்பு பணியையொட்டி கதவணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்
x

நெரிஞ்சிப்பேட்டை மின் நிலைய பராமரிப்பு பணியையொட்டி கதவணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் தடுப்பு அணை கட்டப்பட்டு உள்ளது. இதன் மூலம் 30 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந்த தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைப்பதன் மூலம் அந்த பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், 25-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் பிரச்சினையும் தீர்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட மக்களை ஒன்றிணைக்கும் வகையில் நெரிஞ்சிப்பேட்டை- பூலாம்பட்டி நீர்வழி படகு போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் இந்த தடுப்பணையில் மே மாதம் மின் நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெறும். அப்போது இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் திறந்துவிடப்படு்ம்.

அதன்படி இந்த ஆண்டு மின் பராமரிப்பு பணியையொட்டி தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கடல் போல் காட்சி அளித்த காவிரி ஆறு, குட்டை போல் காட்சி அளிக்கிறது. மேலும் மணலும், பாறைகளுமாக ஆறு காட்சி அளிக்கிறது. தண்ணீர் குறைந்து விட்டதால் ஏராளமான மீனவர்கள் ஆற்றில் மீன் பிடித்து வருகின்றனர்.

பராமரிப்பு பணி 15 நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் தடுப்பணையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Related Tags :
Next Story