பழுதடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்
பழுதடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று குத்தாலம் பேரூராட்சி கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
குத்தாலம்;
பழுதடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று குத்தாலம் பேரூராட்சி கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
பேரூராட்சி கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி அவை கூடத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் சம்சுதீன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ரஞ்சித் வரவேற்றார். கூட்டத்தில் 9 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., உள்ளிட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதன் விவரம் வருமாறு:-
வேகத்தடை
ஞானசம்பந்தம்(தி.மு.க.): குத்தாலம் தேரடி மெயின் ரோட்டில் இருந்து சொக்கு நகருக்கு செல்லக்கூடிய மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கியபடி செல்கிறது. மேலும் மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளன. இந்த வழியாக பள்ளி வாகனங்கள் சென்று வருகிறது. இதை மின்வாரிய அதிகாரிகள் கவனித்து சீரமைக்க வேண்டும்.சேகர் (தி.மு.க.): கே.ஆர்.எஸ். நகர் மற்றும் கீழ மாந்தோப்பு தெருவில் 2 இடங்களில் பேரூராட்சிக்கு உட்பட்ட வாட்டர் டேப்பில் சிமெண்டு தளம் அமைத்து தர வேண்டும்.சுகன்யாசுரேஷ் (பா.ம.க.): காவிரி கரை தெருவில் போதிய அளவில் மின்கம்பங்கள் அமைக்க வேண்டும்.காயத்ரி குமார் (தி.மு.க.): 7-வது வார்டுக்கு உட்பட்ட சாலை பிரதான பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும்.பின்னர் தொடர்ந்து பேசிய உறுப்பினர்கள் பேரூராட்சி தலைவரிடம் தங்களது வார்டு பகுதி கோரிக்கைகளை மனுக்களாகவும் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட பேரூராட்சி தலைவர் சங்கீதாமாாியப்பன்நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினார்.