திருமக்கோட்டையில், மயான கட்டிடம் புதுப்பிக்கப்படுமா


திருமக்கோட்டையில், மயான கட்டிடம் புதுப்பிக்கப்படுமா
x

திருமக்கோட்டையில், மயான கட்டிடம் புதுப்பிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

திருமக்கோட்டை,

திருமக்கோட்டையில், மயான கட்டிடம் புதுப்பிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மயான கட்டிடம் சேதம்

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு இறுதியில் வீசிய கஜா புயலால் பல்வேறு இடங்களில் மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல இடங்களில் தென்னை உள்பட பல்வேறு மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதைப்போல திருமக்கோட்டையில் உள்ள மயான கட்டிடம் கடந்த கஜா புயலின் போது சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.

இந்த மயான கட்டிடம் திருமக்கோட்டையில் உள்ள 500 குடும்பங்களுக்கு ஒரே மயான கொட்டகை ஆகும். இந்த கட்டிடத்தில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து அதன் தூண்கள் எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது.

புதுப்பிக்க கோரிக்கை

மயான கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்தால் இந்த பகுதி மக்களில் யாராவது இறந்தால் அவர்களின் உடலை தகனம் செய்ய அவதிப்படும் நிலை ஏற்படும்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து மயான கட்டிடத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story