தில்லைவிளாகம்- அரமங்காடு சாலை சீரமைக்கப்படுமா?


தில்லைவிளாகம்- அரமங்காடு சாலை சீரமைக்கப்படுமா?
x

முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம்- அரமங்காடு சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

தில்லைவிளாகம்;

முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம்- அரமங்காடு சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

தொடக்கப்பள்ளி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அருகே தில்லைவிளாகம்- அரமங்காடு சாலை உள்ளது. இங்கு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் தில்லைவிளாகம், வடகாடு முத்துப்பேட்டை போன்ற பகுதிகளுக்கு செல்ல இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும். மேலும் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை திருவாரூர் போன்ற பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டியுள்ளது.

குண்டும்- குழியுமான சாலை

தற்போது தில்லைவிளாகம்- அரமங்காடு சாலை சேதமடைந்து குண்டும்- குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் மக்கள் மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள். குறிப்பாக பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் இந்த சாலை வழியாக செல்லும் போது வாகனங்கள் பழுதடைந்து இடையூறுகளை சந்திக்கிறார்கள். எனவே தில்லைவிளாகம்- அரமங்காடு சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story