உடுமலை பகுதியில் பல்லாங்குழியான சாலைகளால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது.


உடுமலை பகுதியில் பல்லாங்குழியான சாலைகளால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது.
x

உடுமலை பகுதியில் பல்லாங்குழியான சாலைகளால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது.

திருப்பூர்

உடுமலை

உடுமலை பகுதியில் பல்லாங்குழியான சாலைகளால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது.

மாணவர்கள்

உடுமலை நகராட்சி 25-வார்டு பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் பிரதான சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக பத்ரகாளியம்மன் லேஅவுட், சிங்கப்பூர் நகர், வள்ளியம்மாள் காலனி, ஜானி பேகம் காலனி, எம்.பி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகிறார்கள். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்துகிறார்கள். இந்த சாலை தற்போது மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறி விட்டது.

பல இடங்களில் சாலை உடைந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளங்களில் தடுமாறும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. அத்துடன் சாலையின் நடுவிலுள்ள பள்ளத்தில் சுமார் அரை அடி உயரத்துக்கு குழாய் நீட்டிக் கொண்டுள்ளது. இரவு நேரங்களில் இந்த சாலையில் பயணிக்கும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அடிக்கடி இந்த குழாயில் தடுக்கி விழுவது தொடர்கதையாக உள்ளது.

சுகாதார சீர்கேடுகள்

சாலையின் நடுவிலுள்ள பாதாள சாக்கடை இறங்கு குழியின் மூடியைச் சுற்றி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பல விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் சாலையின் ஓரங்களிலுள்ள கழிவுநீர்க் கால்வாய்கள் தூர் வாரப்படாமல் மண் மூடியும், புதர் மண்டியும் கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழியில்லாமல் சாலையில் தேங்கும் நிலை உள்ளது. மேலும் கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் தேங்குவதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் நிலை உள்ளது.

அத்துடன் புதர்களில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பதுங்கி குடியிருப்புவாசிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சாலையை சீரமைக்கவும், சாக்கடைக்கால்வாய்களை தூர்வாரி சுத்தப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.இதுகுறித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் உடுமலை நகரச் செயலாளர் தெய்வக்குமார் நகராட்சிக்கு மனு அளித்துள்ளார்.

---

3 காலம்

குண்டும், குழியுமான சாலையை படத்தில் காணலாம்.


Related Tags :
Next Story