குண்டும், குழியுமாக காணப்படும் சாலை
திருச்சிற்றம்பலம் அருகே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
திருச்சிற்றம்பலம்,
திருச்சிற்றம்பலம் அருகே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
கல்வி நிறுவனங்கள்
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில், பேராவூரணி நகருக்கு அடுத்தபடியாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புனல்வாசல் கிராமத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் படித்து வருகின்றனர்.
குண்டும், குழியுமான சாலை
இந்த நிலையில் கட்டையங்காடு, மதன்பட்டவூர், கீழபுனல்வாசல் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 400-க்கு மேற்பட்ட மாணவர்கள் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.கட்டையங்காடு முதல் புனல்வாசல் மேற்கு வரை செல்லும் புதுப்பட்டினம் மெயின் வாய்க்கால் வழியாக செல்லும் தார்ச்சாலை முழுமையாக சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் உள்பட வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சீரமைக்க நடவடிக்கை
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, நீண்ட காலமாக சேதமடைந்த நிலையில் காணப்படும் கட்டையங்காடு-புனல்வாசல் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.