விவசாய பயிர்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்


விவசாய பயிர்களை சேதப்படுத்தி   காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பச்சாபாளையத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. அவற்றை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பேரூர்

பச்சாபாளையத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. அவற்றை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

காட்டு யானைகள்

கோவையை அடுத்த பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில் பச்சாபாளையம் கிராமம் உள்ளது. இங்கு சோளம், வாழை உள்ளிட்டவை அதிகமாக பயிரிடப்படுகிறது.

இந்த நிலையில், தீத்திபாளையம் அருகே அய்யாசாமி மலையடிவார பகுதிகளில் முகாமிடும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து, 3 குட்டியுடன் கூடிய 7 காட்டு யானைகள் வெளியேறியது.

அவை, தசாவதார பெருமாள் கோவில் அருகே வெளியேறி, ஜெகநாதன் நகர் குடியிருப்புக்குள் புகுந்தது.

விளை நிலங்கள் சேதம்

அதன்பிறகு அங்குள்ள தனியார் பள்ளிக்கு தெற்கே செந்தில் என்பவருக்கு சொந்தமான சோளக்காட்டுக்குள் காட்டு யானைகள் புகுந்தன.

அவை அங்கிருந்த, சோளக்கருதுகளை தின்றும் மிதித்தும் பயிர்களை நாசம் செய்தது.

மேலும் காட்டு யானைகள் அதே பகுதியில் சுற்றிச் சுற்றி வந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.


இது குறித்து தகவல் தெரிவித்ததும் பல மணி நேரம் கழித்து வனத்துறை ஊழியர்கள் வந்தனர். அவர் கள், காட்டு யானைகளை வனப்பகுதி நோக்கி விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

வனத்துறையினர் திணறல்

பட்டாசு வெடித்தும் காட்டு யானைகள் வனப் பகுதி நோக்கி செல்லாமல் போக்கு காட்டியது. விளை நிலத்தில் காட்டு யானைகள் அங்கும் இடங்கும் ஓடியதால் பயிர்கள் சேதம் அடைந்தன.

இதனால் காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டியடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறினர்.

மேலும், பச்சாபாளையம் ஸ்ரீரங்காநகர், ஜெகநாதன் நகர், தபால் தந்தி நகர், ஸ்ரீராம் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இதனால் நடைபயிற்சி செல்வதை பலரும் தவிர்த்து வருகின்றனர். எனவே வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்து சென்று குடியிருப்பு மற்றும் விளை நிலத்துக்குள் காட்டு யானைகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story