வாழை மரங்கள் சேதம்


வாழை மரங்கள் சேதம்
x
தினத்தந்தி 14 Sep 2023 7:45 PM GMT (Updated: 14 Sep 2023 7:45 PM GMT)

கோத்தகிரி அருகே வாழை மரங்களை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே வாழை மரங்களை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.

காட்டுயானைகள்

கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் பலாப்பழ சீசன் நிலவும். அப்போது மரங்களில் பழுத்து தொங்கும் பலாப்பழங்களை தின்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டுயானைகள் படையெடுக்கும். தொடர்ந்து பலாப்பழ சீசன் முடிந்த பிறகு மீண்டும் சமவெளி பகுதிக்கு திரும்பிவிடும்.

ஆனால் இந்த ஆண்டு சீசன் தாமதமாக தொடங்கியதால், இன்னும் பலா மரங்களில் பழங்கள் பழுத்து காணப்படுகிறது. அவற்றை தின்பதற்காக காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. அவை சில நேரங்களில் அருகில் உள்ள கிராம பகுதிகளிலும் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

வாழை மரங்கள்

இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரை முல்லை நகர் பகுதியில் பிரவீன் என்ற விவசாயி சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் மேரக்காய் பயிரிட்டு உள்ளார். இந்த தோட்டத்தை ஒட்டி 50-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் சாகுபடி செய்து இருக்கிறார்.

அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்த காட்டுயானைகள் வாழை மரங்களை தின்றும், சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்தன. ஆனால் மேரக்காய் தோட்டத்திற்குள் நுழையவில்லை. இதனால் அங்கு விளைந்து இருந்த மேரக்காய்கள் தப்பின.

பிரச்சினைக்கு தீர்வு

இதுகுறித்து விவசாயி பிரவீன் கூறுகையில், மேரக்காய் தோட்டத்திற்குள் காட்டுயானைகள் புகுந்து இருந்தால், அறுவடைக்கு தயாரான மேரக்காய்கள் வீணாகி, சுமார் ரூ.8 லட்சம் வரை நஷ்டம் ஆகியிருக்கும். மீண்டும் காட்டுயானைகள் வராமல் தடுக்க, மீதமுள்ள வாழை மரங்களை வெட்டி சற்று தொலைவில் உள்ள சாலையில் போட்டு உள்ளோம். விரைவில் இந்த பிரச்சினைக்கு வனத்துறையினர் உரிய தீர்வு காண வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story