வீரகநல்லூர் ஊராட்சி பள்ளியில் வகுப்பறை மேற்கூரை சேதம்; அச்சத்துடன் கல்வி பயிலும் அவலம்


வீரகநல்லூர் ஊராட்சி பள்ளியில் வகுப்பறை மேற்கூரை சேதம்; அச்சத்துடன் கல்வி பயிலும் அவலம்
x

வீரகநல்லூர் ஊராட்சி பள்ளியில் வகுப்பறை மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால் மாணவா்கள் அச்சத்துடன் பாடம் பயின்று வருகின்றனா்.

திருவள்ளூர்

திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரகநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். 6 ஆசிரியா்கள் பணியாற்றுகின்றனர். கடந்த 2007-ம் ஆண்டு ரூ.8.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்தப் பள்ளி கட்டிடத்தை சரிவர பராமரிக்காததால் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் உடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதேபோல் பள்ளி வளாகத்திலுள்ள சமையலறை கட்டிடம், கழிப்பறை ஆகியவை மிகவும் சேதமடைந்து உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பல புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனிடையே சிமெண்ட் பூச்சுகள் சிறிது சிறிதாக அவ்வப்போது பெயர்ந்து விழுவதால் மாணவா்கள் அச்சத்துடன் பாடம் பயின்று வருகின்றனா். அசம்பாவிதம் நடக்கும் முன்பு துறை சார்ந்த அதிகாரிகள் புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story