தடுப்பு சுவரில் மோதி கன்டெய்னர் லாரி சேதம்-அடுத்தடுத்து ஒரே இடத்தில் தொடரும் விபத்து

தடுப்பு சுவரில் மோதி கன்டெய்னர் லாரி சேதம்-அடுத்தடுத்து ஒரே இடத்தில் தொடரும் விபத்து
x

ராணிப்பேட்டையில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து பஸ், கன்டெய்னர் லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து பஸ், கன்டெய்னர் லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

சென்னையில் இருந்து கண்டெய்னர் லாரி ஒன்று ராணிப்பேட்டை முத்துக்கடை நோக்கி நேற்று இரவு எம்.பி.டி சாலையில் வந்து கொண்டிருந்தது. ஆட்டோ நகர் அருகே வரும்போது கண்டெய்னர் லாரி காலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் கண்டெய்னரின் முன் பகுதி சேதம் அடைந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராணிப்பேட்டை போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விபத்து நடைபெற்ற அதே இடத்தில் நேற்று முன்தினம் இரவு தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி, பஸ்சில் இருந்த 6 பேர் காயமடைந்தனர்.

சாலையை அகலப்படுத்தாமல் சாலையின் மையப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டதாலும், போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதாலும், இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க உடனடியாக சாலையை அகலபடுத்தி, சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story