மேல்மலையனூர் அருகே இயங்கும்தார் தொழிற்சாலையால் நிலத்தடி நீர் பாதிப்புகலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு


மேல்மலையனூர் அருகே இயங்கும்தார் தொழிற்சாலையால் நிலத்தடி நீர் பாதிப்புகலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அருகே இயங்கும் தார் தொழிற்சாலையால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், விடிவெள்ளி விவசாயிகள் நல சங்கம் சார்பில் விழுப்புரம் கலெக்டர் பழனியிடம் கோரிக்கை மனுஅளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மேல்மலையனூர் அருகே பரையந்தாங்கள் ஊராட்சி பழம்பூண்டி கிராமத்தில் புதிதாக தார் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளியேறும் நச்சு புகையினால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. இது மட்டுமில்லாமல் இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால், விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும், சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கு அடிக்கடி மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி, அங்கு இயங்கும் தொழிற்சாலையை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

பயிர் காப்பீடு திட்டம்

இதேபோன்று, மற்றொரு மனுவில் மேல்மலையனூர் தாலுகாவிற்கு உட்பட்ட பழம்பூண்டி, கூடுவாம்பூண்டி, காரணி, கம்மந்தாங்கள், பெரவலூர், நொளம்பை உள்ளிட்ட ஊராட்சிகளில் கடந்த காலங்களைப் போலவே கூட்டுறவு சங்கத்தின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் முறைப்படி புதுப்பித்துள்ளோம்.

தற்போது எங்கள் பகுதியில் அதிகமான வறட்சி உள்ள நிலையில் திட்டத்துக்கான தொகையை ரொக்கமாக காட்டுமாறு கூட்டுறவு சங்கத்தின் மூலம் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே எட்டு மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பிப்பு செய்து வந்த நிலையில், விவசாயிகள் நலன் கருதி ஒரு வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த மனுவில் கூறியிருந்தனர்.


Next Story