கோடை மழைக்கு நெற்பயிர்கள் சேதம்


கோடை மழைக்கு நெற்பயிர்கள் சேதம்
x

நெல்லை அருகே கோடை மழைக்கு நெற்பயிர்கள் சேதமடைந்தன.

திருநெல்வேலி

நெல்லை அருகே கோடை மழைக்கு நெற்பயிர்கள் சேதமடைந்தன.

நெற்பயிர்கள்

நெல்லை மாவட்டத்தில் கடந்த 1 வாரமாக கோடை மழை பெய்தது. இதனால் நெல்லை மாநகரில் சாலைகள் சேதம் அடைந்தது. பல்வேறு இடங்களில் சூறை காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வாழைகள் அடியோடு சாய்ந்து சேதம் அடைந்தன.

இந்த நிலையில் நெல்லை அருகே உள்ள புதூர் பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற் பயிர்கள் தரையோடு சாய்ந்து சேதமடைந்துள்ளது. அதாவது புதூரை சேர்ந்த விவசாயியான கதிரவன் என்பவர் தனது நிலத்தில் 5 ஏக்கரில் நெல் நடவு செய்திருந்தார். கிணற்று தண்ணீர் பாசனம் மூலம் நெல் விளைவித்து அறுவடைக்கு ஏற்பாடுகள் செய்து வந்தார்.தொடர் மழையால் இவரது நெற்பயிர்கள் தரையோடு, தரையாக சேதம் அடைந்து கிடக்கிறது. இதனால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயி சிரமப்பட்டு வருகிறார்.

நிவாரணம் தேவை

இதுகுறித்து கதிரவன் கூறுகையில், 'எனது வயலில் தாமதமாக நெல் நடவு செய்தேன். அதனை அறுவடை செய்து நெல் சேகரிக்க ஏற்பாடு செய்திருந்தேன். இந்த நிலையில் தொடர் மழையால் நெற்பயிர் சாய்ந்து விட்டது. தற்போது வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. இதேபோல் தொடர்ந்து 5 நாட்களுக்கு வெயில் அடித்து, காற்று வீசினால் மட்டுமே இந்த பயிர் அறுவடை செய்து நெல் சேகரிக்க முடியும். அதற்கும் இரு மடங்கு செலவு ஆகும். தொடர்ந்து மழை பெய்து விட்டால் நெல் முளைத்து விடும். எனவே சேதம் அடைந்த பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்'' என்றார்.


Next Story