வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு


வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
x

வடசென்னை அனல்மின் நிலையத்தில் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் ஆயிரத்து 1,200 மெகாவாட்டும் சேர்த்து மொத்தம் 1,830 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக முதல் யூனிட்டில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சீர்செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story