கோவில் சிலைகள் சேதம்
கோவை அருகே கோவில்சிலைகளை சேதப் படுத்திய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
கோவை
கோவை அருகே கோவில்சிலைகளை சேதப் படுத்திய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிலை சேதம்
கோவை போத்தனூர் அருகே நஞ்சுண்டாபுரத்தில் உப்புலியன் திட்டு பகுதியில் 60 ஆண்டு கால பழமையான கருப்பராயன் முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு பூஜை முடிந்ததும் பூசாரி, கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
அவர், நேற்று காலை கோவிலை திறக்க வந்த போது கோவிலில் இருந்த சுயம்பு சிலை சேதப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் அங்கு கான்கிரீட்டால் ஆன சிங்கம் சிலை, முனியப்பன் சிலையில் இருந்த வாள் ஆகியவை உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
போலீஸ் விசாரணை
இது குறித்த தகவல் பரவியதும் கோவில் முன் ஏராளமானவர்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அவர்கள், அங்கிருந்த பொதுமக்களிடம், சிலையை சேதப்படுத் திய மர்ம நபர்கள் விரைவாக பிடிபடுவார்கள் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மேலும் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் யார்? எதற்காக சிலையை உடைத்தனர் என்பது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.