மின் மோட்டார் பழுதால் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு:திருப்பரங்குன்றம், திருநகரில் காலிகுடங்களுடன் பெண்கள் சாலைமறியல்


மின் மோட்டார் பழுதால்  குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு:திருப்பரங்குன்றம், திருநகரில் காலிகுடங்களுடன்  பெண்கள் சாலைமறியல்
x

திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் குடிநீர் கேட்டுகாலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் குடிநீர் கேட்டுகாலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின் மோட்டார் பழுது

மதுரை மாநகராட்சி எல்லை விரிவாக்கப்பட்ட பகுதியான திருப்பரங்குன்றம் மேட்டுத்தெருவில் 18 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட ராட்சத நீர்தேக்க தொட்டி அமைந்து உள்ளது. இந்த தொட்டிக்கு பசுமலை மூலக்கரையில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டுவந்து நிரப்பப்பட்டு குழாய்கள் வழியாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்காக விராட்டிபத்து வைகை படுகை, மாடக்குளம் கண்மாய், தென்கால் கண்மாய், சிற்றணை வைகை படுகையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு பசுமலை மூலக்கரை நீரேற்று நிலையத்தில் உள்ள 2 மின்மோட்டார்களும் பழுதானது. இதனையடுத்து நீரேற்று நிலையத்தில் இருந்து தரைமட்ட ராட்சத நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லவில்லை. அதனால் 2 வாரம் குடிநீர் சப்ளை இன்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விலைக்கு குடிநீர் வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இதே சமயம் பழுதான மின்மோட்டாரை சரிசெய்து இயக்கிய போதிலும் சரியாகவில்லை. கடந்த ஒரே மாதத்தில் 3 முறை பழுதாகி விட்டது.

குடிநீர் தட்டுப்பாடு

இதற்கிடையில் திருநகர் மக்களுக்காக வினியோகிக்கப்பட்ட 9 லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் 4 நாளைக்கு ஒருமுறை திருப்பரங்குன்றத்திற்கும், அடுத்த 4 நாட்களுக்கு பிறகு திருநகருக்குமாக சுழற்சி முறையில் வினியோகிக்கப்படுகிறது. இது மக்களுக்கு பற்றாக்குறையாக உள்ளது.. கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் மீன் பிடிப்பதற்காக குடிநீர் ஆதாரமான தென்கால் கண்மாயில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வறண்டு போனதால் நிலத்தடி நீர் குறைந்துள்ளது. மேலக்கால் வைகை படுகையில் இருந்து திருநகர் மக்களுக்கு வந்து கொண்டிருந்த 3 லட்சம் லிட்டர் குடிநீரும் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் குடிநீர் தட்டுப்பாடு தொடங்கி உள்ளது.

காலிகுடங்களுடன் சாலை மறியல்

இந்நிலையில் நேற்று திருநகர் பகுதி மக்கள் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மகாலட்சுமி காலனி-மங்கம்மாள் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருநகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திருச்சியில் இருந்து திருநகருக்கு வரக்கூடிய காவிரி குடிநீரின்அளவை அதிகப்படுத்துவதோடு திருநகர், திருப்பரங்குன்றம் பகுதிக்கு என்று 2 மின்மோட்டார்கள் பொருத்தி தண்ணீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மூலக்கரை நீரேற்று நிலையத்திற்கு. என்று அதிக திறன் கொண்ட உறுதி தன்மை வாய்ந்த புதிய மின் மோட்டார்கள் பொருத்த வேண்டும் என வலியுறுத்தினர்.


Next Story