சேதமடைந்த குடிநீர் குழாய் 2 நாட்ளில் சீரமைக்கப்படும்


சேதமடைந்த குடிநீர் குழாய் 2 நாட்ளில் சீரமைக்கப்படும்
x

கும்பகோணம் வளையப்பேட்டை பகுதியில் சேதமடைந்த குடிநீர் குழாய் 2 நாட்களில் சீரமைக்கப்படும் என அதிகாரி உறுதி அளித்துள்ளார்..

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணம் வளையப்பேட்டை பகுதியில் சேதமடைந்த குடிநீர் குழாய் 2 நாட்களில் சீரமைக்கப்படும் என அதிகாரி உறுதி அளித்துள்ளார்..

குடிநீர் குழாயில் உடைப்பு

கும்பகோணத்தை அடுத்த குடிதாங்கி பகுதியில் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீர் இந்த நீரேற்று நிலையத்தின் மூலம் பம்ப் செய்யப்பட்டு கும்பகோணம் நகருக்கு தேவையான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் குடிதாங்கி பகுதியில் இருந்து கும்பகோணம் நகருக்கு தண்ணீர் கொண்டுவரும் வளையப்பேட்டை அக்ரஹாரம் பகுதி வழியாக செல்லும் முக்கிய குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில தினங்களாக குடிநீர் வெளியேறி வருகிறது.

2 நாட்களில்...

குழாயில் உடைப்பு ஏற்பட்டது குறித்து தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்ததை தொடர்ந்து கும்பகோணம் மாநகராட்சி உதவி பொறியாளர் சதீஷ் மற்றும் பணியாளர்கள் நேற்று காலை வளையப்பேட்டை அக்ரஹாரம் பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்கு பின் என்ஜினீயா் சதீஷ் கூறுகையில், நாளை (திங்கட்கிழமை) முதல் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணிகள் தொடங்கி 2 நாட்களில் முடிக்கப்படும். பணிகளின் தன்மையை பொறுத்து கும்பகோணம் நகருக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவது குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என கூறினாா்.


Next Story