மம்சாபுரம் ஊருணியில் சேதமடைந்த தடுப்புச்சுவர்


மம்சாபுரம் ஊருணியில் சேதமடைந்த தடுப்புச்சுவர்
x

மம்சாபுரம் ஊருணியில் சேதமடைந்த தடுப்புச்சுவரினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

விருதுநகர்

தாயில்பட்டி,

மம்சாபுரம் ஊருணியில் சேதமடைந்த தடுப்புச்சுவரினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

நிலத்தடி நீர்மட்டம்

வெம்பக்கோட்டை ஒன்றியம் மம்சாபுரம் ஊருணி நிரம்பினால் பாறைப்பட்டி, மம்சாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விடும். இ்ந்தநிலையில் இந்த ஊருணியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு 30 வருடங்களுக்கு மேலாகியும் பராமரிக்கப்படாததால் சுற்றுச்சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்து விட்டது.

இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இந்த ஊருணியின் கரை பகுதிக்கு அருகே அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. ஆதலால் இந்த வழியாக தான் தினமும் எண்ணற்ற மாணவ, மாணவிகள் சைக்கிளில் சென்று வருகின்றனர்.

சேதமடைந்த சுற்றுச்சுவர்

மம்சாபுரத்தில் இருந்து மாய தேவன் பட்டி மெயின் ரோட்டில் இ்ந்த ஊருணி அமைந்து இருப்பதால் இ்ந்த வழியாக தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த பகுதியில் குவாரிகள் அதிகம் உள்ளதால் கேரளா, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் தினமும் இந்த வழியாக சென்று வருகின்றன. இவ்வாறு போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் உள்ள ஊருணியின் சுற்றுச்சுவர் இடிந்து இருப்பதால் இ்ந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே விபத்து எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக ஊருணியில் சுற்றுச்சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஒன்றிய செயலாளர் அழகுமலை, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மாணவர்கள் அச்சம்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

மம்சாபுரத்தில் இருந்து மாய தேவன் பட்டி மெயின் சாலை தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் நிறைய பேர் சைக்கிளில் இந்த வழியாக சென்று வருகின்றனர். இந்தநிலையில் மேற்கண்ட பகுதியில் உள்ள ஊருணியின் சுற்றுச்சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்து விட்டது. இதனால் வாகனங்கள் வரும் போது மாணவர்கள் சாலையில் ஒரு வித அச்சத்துடன் தான் ஒதுங்கி நிற்கின்றனர். எனவே விபத்து எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக ஊருணியின் சுற்றுச்சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story