சேதமடைந்த குடிநீர் வால்வு தொட்டிகள்


சேதமடைந்த குடிநீர் வால்வு தொட்டிகள்
x

சேதமடைந்த குடிநீர் வால்வு தொட்டிகள் சேதமானது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டையில் இருந்து சிவகாசி மாநகராட்சிக்கு மானூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் கொண்டு செல்ல குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. வனமூர்த்திலிங்கபுரம், விஜயகரிசல்குளம், பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட சில இடங்களில் குடிநீர் குழாயில் வால்வு இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் வால்வினை சுற்றி கட்டப்பட்ட தொட்டிகள் பயன்பாட்டிற்கு வரும் முன் விரிசல் விழுந்து சேதமடைந்துள்ளன. ஆதலால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Related Tags :
Next Story