சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும்


சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும்
x

சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும்

திருவாரூர்

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே பாலக்குறிச்சியில் சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலக்குறிச்சி கிராமம்

கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலம், சேந்தங்குடி சாலையில் பாலக்குறிச்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டிய சாலையில் அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழலகம் கட்டப்பட்டது.

இந்த நிழலகத்தை கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், சேந்தங்குடி, விக்ரபாண்டியம், கோட்டூர், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று வரக்கூடிய அந்த பகுதி மக்கள் மற்றும் ஏராளமான பள்ளி மாணவர்கள் பஸ் வரும் வரை காத்திருப்பதற்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

பயணிகள் நிழலகம் சேதம்

கடந்த சில ஆண்டுகளாக பயணிகள் நிழலகம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு, மேற்கூரை மற்றும் இருக்கைகள் இல்லாமல் உள்ளன.

இதனால் பயணிகள் நிழலகத்தை பயன்படுத்த முடியாமல் பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலையிலேயே நிற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் மழை, வெயில் காலங்களில் முதியவர்கள், பெண்கள் உள்ளே அமர முடியாமல் வெளியே காத்திருக்கும் அவலம் உள்ளது.

கோரிக்கை

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைத்து தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள், பயணிகள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story