சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும்
கூத்தாநல்லூர் அருகே உள்ள சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த பயணிகள் நிழலகம்
கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடியில் இருந்து கொரடாச்சேரி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் சேகரை பிள்ளையார் கோவில் எதிரே அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழலகம் கட்டப்பட்டது. இந்த சாலை கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், மன்னார்குடி, திருவாரூர், கொரடாச்சேரி, குடவாசல், நீடாமங்கலம், கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்ல எளிதான வழித்தடம் ஆகும்.
இதனால் சேகரையில் உள்ள பயணிகள் நிழலகத்தை பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 7ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பயணிகள் நிழலகம் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக, அங்கு அமைக்கப்பட்ட இருக்கைகள், தரைதளம் மற்றும் மேற்கூரை போன்றவற்றில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளது.
மரத்தடியில் நின்று...
இதனால், பயணிகள் நிழலகத்தை பயன்படுத்த முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் பயணிகள் நிழலகத்தை பயன்படுத்த முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் சாலையோரங்களிலும், மரத்தடியிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், பல்வேறு வகையில் சிரமங்கள் ஏற்படுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்ட்ட அதிகாரிகள் சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.