சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்


சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்
x

சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கீழபனங்காட்டாங்குடியில் சேதமடைந்த பயணிகள் நிழற்குைடயை சீரமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் நிழற்குடை

கூத்தாநல்லூர் அருகே திருவாரூர், மன்னார்குடி சாலையில் இடையே கீழபனங்காட்டாங்குடி உள்ளது. இதனையொட்டிய சாலையோரத்தில் அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது. கீழபனங்காட்டாங்குடி, வேளுக்குடி, மங்களாபுரம், கானூர், வடகட்டளை கோம்பூர், பழையனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இந்த பயணிகள் நிழற்குடைைய பயன்படுத்தி வருகின்றனர்.

சிமெண்டு காரைகள் பெயர்ந்து

திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் இந்த பயணிகள் நிழற்குடை அமைந்துள்ளதால், பயணிகள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பஸ் வரும் வரை காத்திருந்து செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த பயணிகள் நிழற்குடை சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவில் உள்ளது.

சீரமைக்க வேண்டும்

இதனால் மேற்கூரை இடிந்து விழுமோ? என்ற அச்சத்துடன் பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் சாலையோரத்திலேயே பஸ் வரும் வரை நிற்கின்றனர். மேலும் வெயில், மழை நேரங்களில் முதியவர்கள், பெண்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும். இ்ல்லையெனில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டித்தர வேண்டும் என பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

--


Next Story