சேதமடைந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டிடம்

வாய்மேடு அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டிடம் சேதமடைந்து உள்ளது. புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாய்மேடு:
வாய்மேடு அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சேதமடைந்து உள்ளது. புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த கட்டிடம்
வாய்மேடு அருகே தகட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கட்டிடம் கடந்த 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தின் மேல் பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்த அந்த கட்டிடம் வழுவிழந்து காணப்படுகிறது.
இந்த கட்டிடத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 1800 விவசாயிகளில் கணக்குகள் உள்ளன.
பொதுமக்கள் அச்சம்
இதில் உள்ள விவசாயிகள் தங்களது நகைகளை அடகு வைக்கவும், விவசாய கடன் வாங்கவும் அடிக்கடி இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இ்தனால் இங்கு வரக்கூடிய பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இங்கு மூன்று பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த நிலையில் உள்ள தகட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






