ரெயில்வே சுரங்கபாதையில் சேதமான சாலை


ரெயில்வே சுரங்கபாதையில் சேதமான சாலை
x

ரெயில்வே சுரங்கபாதையில் சாலை சேதமானது.

திருச்சி

கல்லக்குடி அருகே உள்ளது முதுவத்தூர் கிராமம். திருச்சி மாவட்டதின் கடைகோடி கிராமமான இந்த ஊராட்சியையொட்டி அரியலூர் மாவட்டம் உள்ளது. இந்த கிராம மக்கள் வேலைவாய்ப்புக்காகவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும் கல்லக்குடிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சன்னாவூர், வெங்கனூர், ஆங்கியனூர், கரைவெட்டி ஆகிய கிராம மக்கள் முதுவத்தூர் கிராமம் வழியாகதான் வந்து செல்கின்றனர். இந்நிலையில் முதுவத்தூர்-கல்லக்குடி இடையே ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. தற்போது இந்த சுரங்கப்பாதையில் உள்ள சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த சுரங்கபாதையின் வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story