பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்
பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அதன் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வீராசாமி, துணை செயலாளர் ரமணன், நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, ராமச்சந்திரன், ராஜசேகரன், சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் அனைவரும் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது. மயிலாடுதுறை நகரில் உள்ள பழுதடைந்த அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செயலாளர் தியாகராஜன், பொருளாளர் கலியபெருமாள் ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினர். முடிவில் சாமி.கணேசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story