சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்


சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்
x

முத்துப்பேட்டையில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர் கோாிக்கை விடுத்தார்.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர் கோாிக்கை விடுத்தார்.

ஒன்றியக்குழு கூட்டம்

முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கனியமுதா ரவி தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மேலாளர் லெனின் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதன் விவரம் வருமாறு:-

பழனிவேலு:- பாண்டி முதல் கற்பகநாதர்குளம் வரையிலான சுமார் 9கிலோமீட்டர் சாலையை அகலப்படுத்தி சீரமைத்து தர வேண்டும். கற்பகநாதர்குளம் காடுவெட்டி பகுதியில் உள்ள சன்னக்குள சாலையை தார் சாலையாக மாற்றித்தர வேண்டும்., இழுப்பு தோப்பு சாலையை சீரமைத்து தரவேண்டும். வாடியக்காடு இணைப்பு சாலையிலிருந்து மயானக்கொட்டகை வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.

தார் சாலை

தேவகி: பழுதடைந்த நூலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். பொதுமக்கள் வசதிக்கு மேல்நிலைநீா்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும், சொத்திரியம் அம்மலூர், ஜகவர் தெரு, சிவராமன் நகர், மஞ்சுக்கோட்டகம் ஆகிய பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.

ராஜா: ஓவரூர் வெள்ளகுளம் சுடுகாடு சாலை மற்றும் கொட்டகை அமைத்து தர வேண்டும். சிலாக்கரை சாலையை தார் சாலையாக மாற்றி தரவேண்டும். வெள்ளங்கால் சுடுகாட்டுக்கு கொட்டகை அமைத்து தரவேண்டும். வெள்ளகுளத்துக்கு தடுப்பு சுவர் அமைத்து தரவேண்டும்.

ரோஜாபானு: எனது பகுதியில் உள்ள சிறு சிறு சாலைகள் படுமோசமான நிலையில் உள்ளன. இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். சிறுபனையூர் பகுதியில் சுடுகாடு கொட்டகை அமைத்து தரவேண்டும்.

நிறைவேற்றப்படும்

மோகன்: ஆலங்காடு பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. இதை சரி செய்து ெதாடர்ந்து தடையன்றி குடிநீா் வழங்க வேண்டும்.

ராதா: வீரன்வயலில் பாலம் கட்டித்தர வேண்டும்.

ஜாம்பை கல்யாணம்: ஜாம்புவானோடை தர்மகோவில் சாலை படுமோசமான நிலையில் உள்ளது. இதை சீரமைத்து தர வேண்டும், தெற்குக்காடு தொடக்கப்பள்ளியை தரம் உயர்த்தி நடுநிலைப்பள்ளியாக மாற்றி தர வேண்டும். இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர். தொடர்ந்து பேசிய ஒன்றியக்குழு தலைவர் கனியமுதா ரவி, கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றி தரப்படும் என கூறினார்.

1 More update

Next Story