நாமக்கல்லில் எண்ணும் எழுத்தும் கற்றல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி


நாமக்கல்லில் எண்ணும் எழுத்தும் கற்றல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 2:03 PM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தினால் குழந்தைகளின் கற்றல் நிலைகளையும், ஆசிரியர்களுடன் ஏற்பட்டுள்ள இணக்கத்தையும் பெற்றோர்களிடம் கொண்டு செல்லும் விதமாக 'எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல் பூங்கா சாலையில் நடந்தது. அப்போது திட்டத்தின் பிரச்சார வாகனத்தின் முன்பு கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். உதவி திட்ட அலுவலர் குமார் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி ஆகியோர் பொதுமக்களுக்கு திட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

முன்னதாக திட்டத்திற்கான பரப்புரை வாகனத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். உதவி திட்ட அலுவலர்கள் பாஸ்கரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி செய்திருந்தார்.


Next Story