மாணவிகளுக்கு நடன போட்டிகள்

கொடைக்கானல் அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு நடன போட்டிகள் நடந்தது.
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடன போட்டிகள் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இப் போட்டிகளை துணைவேந்தர் டாக்டர் கலா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பதிவாளர் ஷீலா, தேர்வு கட்டுப்பாடு அலுவலர் கிளாரா தேன்மொழி, புதுச்சேரி சங்கீத நாட்டியக்கலா சேவா ஆச்சாரியார் தமிழ் மாறன் ஆகியோர் கலந்து கொண்டு பாரம்பரிய நடன கலை குறித்து விளக்கி கூறினர். இப் போட்டிகளில் பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், நடனம், தப்பாட்டம், கிராமிய நடனம், பெண்களின் குடும்ப முன்னேற்றம் மற்றும் சிசுக்கொலைகள் குறித்தும் நடனங்கள் நடைபெற்றன. இதில் கணிதவியல் துறை மாணவிகள் முதல் பரிசை பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை துணைவேந்தர் வழங்கினார். முன்னதாக உடற்கல்வி துறையை சேர்ந்த பேராசிரியை ராஜம் வரவேற்றார். முடிவில் ஹேமமாலினி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாணவிகள், பேராசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






