ஊர்வலத்தில் புலி வேடமணிந்து நடனம்


ஊர்வலத்தில் புலி வேடமணிந்து நடனம்
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது, ஊர்வலத்தில் புலி வேடமணிந்து நடனம் நடந்தது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி கடைவீதியில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில், திருவீதி உலா நிகழ்ச்சி நடந்து வருகிறது. திருவிழாவின் 15-வது நாளான நேற்று காலை 10 மணிக்கு டானிங்டன் மகா சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பெண்கள் பால்குடங்களை தலையில் ஏந்தியவாறு கடைவீதி மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இதில் கலைஞர்கள் பொய்க்கால் நடனம், புலி வேஷ நடனம் ஆடியவாறும், அம்மன் வேடமணிந்தும் ராம்சந்த் சதுக்கம், காமராஜர் சதுக்கம், பஸ் நிலையம் வழியாக மாரியம்மன் கோவிலை சென்றடைந்தனர். மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடந்தது. மாலை 3 மணிக்கு கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஓதுவார் மூர்த்தி, தேவார இசைமணி ஞானசம்பந்தன் ஓதுவார் கலந்துகொண்டு தேவார திருப்புகழ் பண்ணிசை நிகழ்ச்சியை நடத்தினர். மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தாமரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.


Next Story