தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கு


தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-02T00:15:53+05:30)

மேலதிருப்பாலகுடி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கு நடந்தது.

மன்னார்குடி:

மன்னார்குடி வட்டம் மேலதிருப்பாலகுடி கிராமத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 10 மணி அளவில் கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கோவிலின் முன்பு 50 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.


Next Story