ஆபத்தான மின்கம்பம்


ஆபத்தான மின்கம்பம்
x

ஒரத்தநாடு அருகே தஞ்சை -பட்டுக்கோட்டை பிரதான சாலையோரத்தில் ஆபத்தான மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு அருகே தஞ்சை -பட்டுக்கோட்டை பிரதான சாலையோரத்தில் ஆபத்தான மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான மின்கம்பம்

ஒரத்தநாட்டை அடுத்துள்ள பருத்திக்கோட்டை நடைபாலம் அருகில் தஞ்சை-பட்டுக்கோட்டை செல்லும் பிரதான சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் உள்ளது. தற்போது இந்த மின்கம்பம் சேதமடைந்து எந்த நேரமும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தில் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.

இதன் அருகே குடியிருப்புகள் உள்ளதால் எந்தநேரமும் பொதுமக்கள் நடமாட்டமும், பஸ்கள், பள்ளி- கல்லூரி வாகனங்கள் உள்பட தினமும் அதிக வாகனங்கள் சென்றுவரக்கூடிய இந்த சாலையோரத்தில் உள்ள ஆபத்தான மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த பகுதி மக்கள்தெரிவி்க்கின்றனர்.

அதிகாரிகள் கவனிப்பார்களா?

எனவே மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையோரத்தில் ஆபத்தாக உள்ள மின்கம்பத்தால், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறுவதற்கு முன்பு இந்த மின்கம்பத்தை சீரமைத்து புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story