திருப்பத்தூர்-காரைக்குடி சாலையோரத்தில் ஆபத்தான மின்கம்பங்கள்


திருப்பத்தூர்-காரைக்குடி சாலையோரத்தில் ஆபத்தான மின்கம்பங்கள்
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 5:47 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர்-காரைக்குடி சாலையோரத்தில் ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் உள்ளன. விபத்து ஏற்படும் முன் அதை விரைந்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சிவகங்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூர்-காரைக்குடி சாலையோரத்தில் ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் உள்ளன. விபத்து ஏற்படும் முன் அதை விரைந்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆபத்தான மின்கம்பங்கள்

திருப்பத்தூரில் இருந்து பிள்ளையார்பட்டி காரைக்குடி செல்லும் பிரதான சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். இதில் மனமேல்பட்டி அருகில் சாலை ஓரத்தில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மிகவும் சேதம் அடைந்தும் எப்ேபாது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையிலும் உள்ளன.

மேலும் தற்போது அந்த மின்கம்பங்கள் அருகிலேயே துரிதமாக நெடுஞ்சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க பொதுமக்கள் பலமுறை மின் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இருப்பினும் அதை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

சீரமைக்க கோரிக்கை

மனமேல்பட்டி சாலையோரத்தில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் கான்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளன. தற்போது மழைக்காலம் என்பதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிதாக மின்கம்பங்களை அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் கேட்ட ேபாது ஆபத்தான மின் கம்பங்களை மாற்ற மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் மாற்றி விடுவோம் என்றார்.


Next Story