சாலையோரத்தில் உள்ள ஆபத்தான மரங்கள்
சாலையோரத்தில் உள்ள ஆபத்தான மரங்கள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்
கரூர் மாவட்டம், காணப்பதூர் என்ற இடத்தின் அருகே தோகைமலை-திருச்சி மெயின் ரோட்டில் சாலையோரத்தில் புளியமரங்கள் உள்ளன. இந்த மரத்தில் இருந்து மரக்கிளைகள் அடிக்கடி உடைந்து அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகனங்கள் மீது ஒடிந்து விழுந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தற்போது தோகைமலை பகுதியில் கனமழை பெய்து வருவதால் மரக்கிளைகள் எப்போது ஒடிந்து விழும் என தெரியவில்லை. இதேபோல் தோகைமலை-பாளையம், தோகைமலை-குளித்தலை, தோகைமலை-மணப்பாறை நெடுஞ்சாலைகளிலும் மரங்களில் மரக்கிளைகள் காய்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story