உப்பனாறு பாலத்தில் ஆபத்தான பள்ளம்
தரங்கம்பாடி உப்பனாறு பாலத்தில் உள்ள ஆபத்தான பள்ளம் சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
பொறையாறு:
தரங்கம்பாடி உப்பனாறு பாலத்தில் உள்ள ஆபத்தான பள்ளம் சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
உப்பனாறு பாலம்
தரங்கம்பாடியில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் உப்பனாற்றின் குறுக்கே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக புதுச்சேரி, நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.தினமும் இந்த பாலம் வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
ஆபத்தான பள்ளம்
போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தின் தடுப்புச்சுவரின் அருகே சாலையில் ஆபத்தான பள்ளம் ஏற்பட்டுள்ளது.மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீேழ விழுந்து காயம் அடைகின்றனர்.இரவில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
இந்த ஆபத்தான பள்ளத்தால் வாகன ஓட்டிகள், இந்த வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உப்பனாறு பாலத்தை பார்வையிட்டு ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.