அரசு பள்ளி வளாகத்தில் ஆபத்தான மின்மாற்றி


அரசு பள்ளி வளாகத்தில் ஆபத்தான மின்மாற்றி
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாப்படுகை அரசு பள்ளி வளாகத்தில் ஆபத்தான மின்மாற்றி; இடமாற்றம் செய்ய பெற்றோர் கோரிக்கை

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே மாப்படுகை அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த அரசு உயர்நிலைப்பள்ளியின் வளாகத்திலேயே மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது பள்ளி வளாகத்தில், மாணவர்கள் விளையாடும் பகுதியில் இந்த மின்மாற்றி அமைந்துள்ளது. இதனால் தங்கள் பிள்ளைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தில் பெற்றோர் உள்ளனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் மின்வாரியத்திடமும், கல்வித்துறை அதிகாரியிடமும் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனாலும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே குழந்தைகளின் நலன் கருதி, ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், பள்ளி வளாகத்தில் உள்ள இந்த மின்மாற்றியை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story