மழவன்சேரம்பாடியில் ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்

மழவன்சேரம்பாடியில் ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் அருகே மழவன்சேரம்பாடி மேல்பகுதியில் சாமியார்மலை அடி வாரத்தை ஒட்டி ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். குடியிருப்புகளை ஒட்டி அபாயகரமான மரங்கள் உள்ளது. மேலும் மரக்கிளைகள் அடிக்கடி முறிந்து வீடுகளின் மேல் விழுந்து வீடுகள் சேதமடைந்து வருகிறது. இதேபோல் பொதுமக்களின் மீதும் விழுந்து வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் சிரமப்படடு வருகிறார்கள். குறிப்பாக மழைகாலங்களில் பலத்த காற்றுவீசும் போது மரங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால் அச்சமடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான மரங்களை ஆய்வு செய்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story






