லட்சுமி நரசிம்மர் கோவில் குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ராணிப்பேட்டை
தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசையான மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். அதன்படி புரட்டாசி மாத மகாளய அமாவாசையான நேற்று முன்னோர்களுக்கு ஏரி, குளம், ஆறுகளில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சோளிங்கர் யோகலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் பிரம்ம தீர்த்த குளத்தில் பொதுமக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர்.
தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சோளிங்கர் போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர்.
Related Tags :
Next Story