மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்


மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x

மகாளய அமாவாசையையொட்டி கும்பகோணம் மகாமக குளக்கரையில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்த வழிப்பட்டனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

மகாளய அமாவாசையையொட்டி கும்பகோணம் மகாமக குளக்கரையில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்த வழிப்பட்டனர்.

அமாவாசை

ஒவ்வொரு ஆண்டும் 12 அமாவாசை வந்தாலும், ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை எனும் புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமாக விரதம் கடைப்பிடிப்பது வழக்கம். ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை திதியில் நாம் விரதமிருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும், தை, ஆடி, மகாளய அமாவாசை தினத்திலாவது நாம் விரதமிருந்து தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது அவசியம்.அப்படி செய்தால் முன்னோர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி இன்று ஆடி கடைசி அமாவாசை என்பதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள், புண்ணிய தலங்களில் ஏராளமானோர் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். கும்பகோணத்தில் உள்ள மகாமககுளம் மிகவும் புகழ் பெற்றதாகவும், புராதன சிறப்பு மிக்கதாகவும் விளங்குகிறது.

தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

கும்பகோணம் மாநகருக்கு அழகு சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த குளத்தை சுற்றி 16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 கோயில்கள் உள்ளன. குளத்துக்குள் உள்ள 21 தீர்த்த கிணறுகள் புனித தன்மை வாய்ந்தவையாகும். இத்தகைய சிறப்பு பெற்ற மகாமககுளத்தில் மகாளய அமாவாசை எனும் புரட்டாசி அமாவாசை தினத்தன்று பொதுமக்கள் ஏராளமானோர் முன்னோர்களுக்கு பிடித்த காய்கறிகள் மற்றும் உணவுகளை படைத்தும், எள் நவதானியம் வைத்து யாகம் செய்தும் தர்ப்பணம் கொடுத்து மகாமககுளத்தில் புனித நீராடுவது வழக்கம். அதன் படி நேற்று மகாளய அமாவாசையையொட்டி கும்பகோணத்தில் மகாமக குளத்தில் திரளான பொதுமக்கள் காலை முதலே தர்ப்பணம் கொடுக்க வந்தனர்.பின்னர் அவர்கள் அங்குள்ள படித்துறைகளில் புனித நீராடினர். தொடர்ந்து தங்களது முன்னோர்களை நினைத்து முன்னோர்களுக்கு பிடித்த காய்கறிகள் மற்றும் உணவுகளை படைத்தும், எள் நவதானியம் வைத்து யாகம் செய்தும் தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர். இதனால் காலை முதலே குளத்தின் கரையில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு வடை, பாயாசத்துடன் அறுசுவை உணவு படைத்து விட்டு, அன்னதானம் செய்தனர். பசு மாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது உள்ளிட்டவை தர்ப்பணத்தில் இருப்பதால் கோவில்கள் முன்பு கீரை விற்பனையும் அதிகமாக நடந்தது. இதே போல் பாலக்கரை பகுதியில் உள்ள காவேரி படித்துறையிலும் தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

==


Next Story