பழனி முருகன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம்


பழனி முருகன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம்
x

பழனி முருகன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம் செய்தார்.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவிலுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மாலை வந்தார். பின்னர் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதையடு்த்து இரவு 7 மணிக்கு நடைபெற்ற தங்கரத புறப்பாட்டில் கலந்து கொண்டு தங்க ரதம் இழுத்து வழிபட்டார்.

நிகழ்ச்சியில் பழனி நகர செயலாளர் முருகானந்தம், அவைத் தலைவர் குப்புசாமி ஒன்றிய செயலாளர்கள் மாரியப்பன், முத்துசாமி, மாவட்ட மீனவர் அணி செயலாளர் மகுடீஸ்வரன், பாலசமுத்திரம் பேரூர் கழக செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். பின்னர் ரோப்கார் மூலம் அடிவாரம் வந்த அவர் காரில் புறப்பட்டு சென்றார்.


Next Story