அம்பை சிவன் கோவிலில் தருமபுரம் ஆதீனம் சிறப்பு பிரார்த்தனை
அம்பை சங்கரலிங்க சுவாமி கோவிலில் தருமபுரம் ஆதீனம் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.
அம்பை:
அம்பை சங்கரலிங்க சுவாமி கோவிலில் மழை வேண்டி தருமபுரம் ஆதீனத்தை சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார். மாவட்டம் முழுவதும் மழையின்றி பிரதான அணைகள் நீரின்றி காணப்படுவதால் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. யானை சம்பந்தர் பாடிய 7 பதிகளை பாடி மழை வேண்டி சிறப்பு தீப ஆராதனை மற்றும் பூஜைகள் செய்தார். இதில் சிவனடியார்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அவரை வரவேற்றனர்.
திருக்குறுங்குடி அழகியநம்பி கோவிலில் இடிக்கப்பட்ட சிவன் சன்னதி கோர்ட்டு உத்தரவுப்படி அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில் திருக்குறுங்குடி அழகியநம்பி கோவிலுக்கு நேற்று தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரம்மாச்சாரிய சுவாமிகள் வருகை புரிந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பிலும், சிவனடியார்கள் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைதொடர்ந்து அவர் புதிதாக கட்டப்பட்ட சிவன் சன்னதி மற்றும் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி சாமிகள், கால பைரவர் சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் ராமானுஜ ஜீயரை சந்தித்து, சிவன் சன்னதி சிறப்பாக கட்டப்பட்டுள்ளதாக நன்றி தெரிவித்தார். பின்னர் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
தென்மண்டல கட்டளை தம்பிரான், தூத்துக்குடி செல்லம் பட்டர் உள்பட பலர் வந்தனர்.