ராஜபாளையத்தில் விடிய, விடிய மழை


ராஜபாளையத்தில் விடிய, விடிய மழை
x

ராஜபாளையத்தில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சாரல் மழை பெய்தது. நேரம் ஆக ஆக பலத்த மழையாக மாறியது. விடிய, விடிய பெய்த மழையினால் ராஜபாளையம் தென்காசி சாலை, சங்கரன்கோவில் முக்கு, முடங்கியார் சாலை, அம்பலபுளி பஜார், மதுரை ராஜ கடை தெரு, நந்தவன தெரு, முகில் வண்ணம் பிள்ளை, ஆவரம்பட்டி, தென்காசி மதுரை தேசிய நெடுஞ்சாலை, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.


Related Tags :
Next Story