வால்பாறையில் விடிய, விடிய வாகன சோதனை


வால்பாறையில் விடிய, விடிய வாகன சோதனை
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் சட்டவிரோத செயல்களை தடுக்க போலீசார் வால்பாறையில் விடிய, விடிய வாகன சோதனை நடத்தினர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் சட்டவிரோத செயல்களை தடுக்க போலீசார் வால்பாறையில் விடிய, விடிய வாகன சோதனை நடத்தினர்.

வாகன சோதனை

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் வால்பாறை பகுதியில் ஏதாவது சட்ட விரோத செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்காகவும், சமூக விரோதிகள் யாராவது வால்பாறை பகுதிக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காகவும், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருந்து வரும் நிலையில் வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுப்பதற்காகவும் நேற்று முன்தினம் இரவு முதல் புதிதாக பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் இணைந்து நகர் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி வரை விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தகவல் கொடுக்க வேண்டும்

சாலையோரத்தில் ஓட்டல்கள் நடத்தி வந்தவர்களிடம் சந்தேகப்படும்படியாக யாராவது வந்தால் போலீஸ் நிலையத்திற்கு உடனே தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. இரவில் இயக்கப்படும் ஆட்டோ ஓட்டுனர்கள் உரிய சீருடை அணிய வேண்டும், சந்தேகப்படும்படியான நபர்கள் மற்றும் பெண்கள் இரவில் ஆட்டோவில் பயணிக்க வந்தால் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பை முன்னிட்டு அடுத்த மாதம்(மே) முழுவதும் வால்பாறை, காடம்பாறை, முடீஸ் மற்றும் சேக்கல் முடி போலீஸ் நிலையத்தின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியில் இரவு ரோந்து பணி, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தெரிவித்தார்.


Next Story