திருமலை கோவிலில் நாள் கதிர் திருவிழா


திருமலை கோவிலில் நாள் கதிர் திருவிழா
x
தினத்தந்தி 23 Oct 2023 12:15 AM IST (Updated: 23 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பண்பொழி திருமலை கோவிலில் நாள் கதிர் திருவிழா நடைபெற்றது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே பண்பொழி திருமலை கோவிலில் நாள் கதிர் திருவிழா நடைபெற்றது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் விளையும் நெல்லை அறுவடை செய்து கோவிலுக்கு ஒப்படைக்கும் விழாவாக இது நடைபெறுகிறது. இதையொட்டி மலை கோவிலில் இருந்து பல்லக்கில் வேல் எடுத்து வரப்பட்டு விவசாயிகள் முன்னிலையில் பூஜைகள் செய்யப்பட்டு அறுவடை தொடங்கியது. பின்னர் சிவன் கோயிலுக்கு நெல் எடுத்துச் செல்லப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு செலுத்த வேண்டிய நெல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பூஜை நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story