பாலிடெக்னிக் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்களில் டி.சி. வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு


பாலிடெக்னிக் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்களில் டி.சி. வழங்க வேண்டும்   கலெக்டரிடம் மனு
x

பாலிடெக்னிக் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்களில் டி.சி. வழங்க வேண்டும்

ஈரோடு

தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

தமிழகத்தில் 490 தனியார் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இங்கு 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் வகையில் இடம் உள்ளன. தொழில் கல்வியாக பார்க்கப்படும் பாலிடெக்னிக் கல்லூரி, எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்கள், அடுத்த 3 ஆண்டுகளில் பணிக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தும். தற்போது பாலிடெக்னிக் படிக்க வரும் மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் அரசு, தனியார் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் மாற்றுச்சான்றிதழ் (டி.சி.) வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். தங்கள் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 சேர்க்கை குறைந்தால், பள்ளி கல்வித்துறைக்கு பதிலளிக்க வேண்டும். அதிக மாணவர்கள் உள்ள பள்ளிக்கு, இங்குள்ள ஆசிரியர்களை மாற்றும் நிலை ஏற்படும். சில பள்ளிகளில் குறிப்பிட்ட பாடப்பிரிவு அகற்றப்படும் நிலை ஏற்படுவதால், பாலிடெக்னிக்கில் சேர விடாமல் தடுக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு உரிய உத்தரவு பிறப்பித்து, பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கையை தடுக்கும் முயற்சியை கைவிட செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.


Next Story