கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவி சாவு


கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவி சாவு
x

கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.

மாணவி

கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன். இவருடைய மகள் பிரியதர்ஷினி (வயது 16). 10-ம் வகுப்பு மாணவியான இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க சென்றார். அவர் குளித்துக்கொண்டு இருந்தபோது சோப்பு வழுக்கி தண்ணீரில் விழுந்துவிட்டது. அதை எடுப்பதற்காக இறங்கியபோது அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

குளிக்க சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்ப வரவில்லையே என்று சந்தேகமடைந்த பெற்றோர் உறவினர்களுடன் வாய்க்காலுக்கு வந்து பார்த்தனர். அப்போது கரையில் துணிகள் மட்டும் கிடந்தன. இதனால் அவர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று பயந்து, அலறி துடித்தபடி வாய்க்காலில் இறங்கி தேடினார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

உடல் மிதந்தது

இந்தநிலையில் நிச்சாம் பாளையம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் பிரியதர்ஷினியின் உடல் மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரியதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி துடித்தது காண்போரையும் கண்கலங்க செய்தது.


Related Tags :
Next Story