ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்பு


ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

ஓசூர் தர்கா பகுதியை சேர்ந்தவர்கள் மாயன், சந்திரா தம்பதி. இவர்களின் மகன் சக்தி (வயது 24). இவர் நேற்று முன்தினம் தனது உறவினர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அவர்கள் முதலைப்பண்ணை அருகே காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது திடீரென சக்தி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்த தகவலின் பேரில் ஒகேனக்கல் போலீசார், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று, சக்தியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று காலை மாமரத்துக்கடவு பரிசல் துறை அருகே சக்தி உடல் மிதந்தது. அதனை தீயணைப்பு துறையினர் மீட்டனர். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story