பூசாரிபட்டியில் கால்வாயில் முதியவர் பிணம்


பூசாரிபட்டியில் கால்வாயில் முதியவர் பிணம்
x

பூசாரிபட்டியில் கால்வாயில் முதியவர் பிணம்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே பூசாரிபட்டி பி.ஏ.பி. கால்வாயில் முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக கோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் தளி அருகே உள்ள சின்னப்புத்தூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (வயது 70) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக தளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்படடு உள்ளது.

இதற்கிடையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. எனவே அவர் விரக்தி அடைந்து கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story