பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பெண் பிணம்
சேரன்மாதேவியில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார்.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி ஆலடி மணிநகர் பகுதியை சார்ந்த சரஸ்வதி என்பவரது மகள் மகாதேவி (வயது 45). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது வீட்டில் இருந்து கடந்த 3 நாட்களாக வெளிவராத நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் சேரன்மாதேவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது மகாதேவி இறந்து அழுகிய நிலையில் சடலமாக இருந்தார். உடனடியாக அவரது உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story