நாச்சியார் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு


நாச்சியார் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் நாச்சியார் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு வருவாய்த்துறையினர் விசாரணை

கடலூர்

விருத்தாசலம்

நாச்சியார் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு

வருவாய்த்துறையினர் விசாரணை

விருத்தாசலம், ஜூன்.24-

விருத்தாசலம் பெரியார் நகர் தீயணைப்பு நிலையம் பின்புறம் நாச்சியார் குளம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளம் தூர்வாரப்பட்டது. மேலும் கரையை பலப்படுத்தி சுற்றிலும் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வந்தன. ஆனால் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த குளத்தில் ஏராளமான மீன்கள் காணப்பட்டது. தற்போது நீர் வற்றிய நிலையில் கடந்த சில நாட்களாக குளத்தில் மீன்கள் செத்து கரை ஒதுங்கி வந்தது. நேற்று அனைத்து மீன்களும் செத்து மிதந்தது. இதில் பெரும்பாலான மீன்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதால் குளத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் வீணாகியதோடு துர்நாற்றம் வீசியது. இதனால் குளக்கரையை சுற்றிலும் வசிக்கும் பொதுமக்கள் நாற்றம் தாங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குளத்தில் மர்மநபர்கள் யாரேனும் விஷம் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story