மாவட்ட, மண்டல அளவில்முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு பதிவு செய்ய காலக்கெடுகலெக்டர் கார்மேகம் தகவல்


மாவட்ட, மண்டல அளவில்முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு பதிவு செய்ய காலக்கெடுகலெக்டர் கார்மேகம் தகவல்
x

முதல்-அமைச்சர் கோப்பைக்கு மாவட்ட, மண்டல அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டியில் பங்கேற்க வருகிற 23-ந் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க காலக்கெடு விதிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கார்மேகம் கூறியுள்ளார்.

சேலம்

சேலம்,

விளையாட்டு போட்டிகள்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் சேலம் மாவட்ட, மண்டல அளவில் நடத்தப்பட உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் ஆண், பெண்களுக்கு தனித்தனியே இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதில் மாவட்ட அளவில் 42, மண்டல அளவில் 8 என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன.

15 முதல் 35 வயது வரை உள்ள பொதுப்பிரிவினர்களுக்கு கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது. 12 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, ஆக்கி, நீச்சல், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளும், மண்டல அளவில் டென்னிஸ், பளு தூக்குதல், பீச் வாலிபால் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.

மாணவ, மாணவிகள்

17 முதல் 25 வயது வரை உள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கைப்பந்து, மேஜைப்பந்து, கிரிக்கெட் போட்டிகளும், மண்டல அளவில் டென்னிஸ், பளு தூக்குதல் போட்டிகளும் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் போட்டிகளுக்கு வயது வரம்பு இல்லை.

மாவட்ட அளவில் இறகுப்பந்து, தடகளம், கைப்பந்து, கபடி, எறிப்பந்து போட்டிகளும், மண்டல அளவில் இறகுப்பந்து, தடகளம், கைப்பந்து, கபடி, எறிபந்து போட்டிகளும் நடைபெறுகிறது.

மேலும் அரசு ஊழியர்களுக்கான போட்டிகளுக்கு வயது வரம்பு இல்லை. மாவட்ட அளவில் கபடி, தடகளம், இறகுப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளும் நடைபெறுகிறது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பப்படும் பள்ளி, கல்லூரியில் படிக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பொதுமக்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வீரர்களின் தனிநபர் மற்றும் குழு விவரங்களை வருகிற 23-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் மூலம் பதிவு செய்யாதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள இயலாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story