ஊரக பகுதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு கால அவகாசம்


ஊரக பகுதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு கால அவகாசம்
x
தினத்தந்தி 30 July 2023 12:45 AM IST (Updated: 30 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் ஊரக பகுதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார்.

சிவகங்கை

சிவகங்கை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் ஊரக பகுதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார்.

உரிமைத்தொகை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி கடந்த 24-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணி வருகிற ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறும். இந்த பணிக்காக ஊரக பகுதிகளில் 695 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய முகாமிற்கு வரவேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்படுகிறது. குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் வழங்கப்பட்டுள்ள நாளில் முகாம்களுக்கு சென்று விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்யலாம்

அவ்வாறு பதிவு செய்ய தவறியவர்களுக்காக வருகிற ஆகஸ்டு 3 மற்றும் 4-ந் தேதி ஆகிய 2 நாட்கள் முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்களை பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே டோக்கனில் குறிப்பிட்ட நாளில் முகாமிற்கு சென்று விண்ணப்பத்தை பதிவு செய்ய தவறியவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள முகாமிற்கு 3 மற்றும் 4-ந் தேதி சென்று விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story